பிபிபி கட்சியின் புதிய உதவித் தலைவர்கள் – செயலாளருக்கு பாராட்டு மழை!

கோலாலம்பூர் மார்ச் 27-
பிபிபி எனப்படும் மக்கள் முற்போக்கு கட்சி இனம் மதம் பார்க்காமல் அனைத்து இனங்களையும் அரவணைத்து செல்கிறது.

ஒரு நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட பிபிபி கட்சி இப்போது டத்தோ டாக்டர் லோகபாலா தலைமையில் சீரும் சிறப்புமாக வெற்றி நடை போடுகிறது.

கட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் புதிய இரண்டு உதவித் தலைவர்களாக Dato Inder Singh மற்றும் Dato JK @ Muhammad Noah Bin Abdullah நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அதேசமயம் பிபிபி கட்சியின் புதிய தலைமைச் செயலாளராக
Datuk K. Santhra நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த மூவரையும் கௌரவிக்கும் விழா இன்று பங்சாரில் விமர்சையாக நடைபெற்றது.

பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் துணை தலைவர் டத்தோ மோகன் கந்தசாமி, உதவித் தலைவர் டத்தோ இளையப்பன், பொருளாளர் டத்தோ டல்ஜிட் சிங், இளைஞர் அணி தலைவர் சத்யா சுதாகரன், மகளிர் அணி தலைவி புனிதா முனிசாமி, சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles