

கோலாலம்பூர் மார்ச் 27-.
மாரான் மரத்தாண்டவர் ஆலய பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு மக்கள் ஓசை நாளிதழ் ஏற்பாட்டில் கோலாலம்பூர் மாரான் புனித பெருநடை போட்டி இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
கோலாலம்பூர் உமாராணி உணவகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பிபிபி கட்சியின் தேசிய துணை தலைவர் டத்தோ இண்டர்ஜிட் சிங் முக்கிய பிரமுகராக கலந்து கொண்டு புனித பெருநடை போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
மக்கள் ஓசை ஆசிரியர் பி.ஆர்.இராஜன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த போட்டி வெற்றி பெற பிபிபி கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா, உமாராணி குழுமத்தின் தலைவர் டத்தோ ஏ.கே.இராமலிங்கம் முழு ஆதரவு வழங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

