
தெஹ்ரான்: மார்ச் 27-
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து நடத்தி வரும் வான்வழித் தாக்குதலை தற்போது தரைவழி தாக்குதலுக்கு அமெரிக்கா தயாராகி வருவதால் வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒன்றிணைந்து இன்றுடன் 28ஆவது நாளாக ஈரான் மீது ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ என்ற பெயரில் அதிரடித் தாக்குதலை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், இன்றைய நிலவரப்படி, அமெரிக்காவின் தரைவழி ஊடுருவலைத் தடுக்க ஈரான் தனது முழு பலத்தையும் திரட்டியுள்ளது.
இதுதொடர்பாக ஈரான் அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், ‘அமெரிக்கப் படைகளின் ஊடுருவலைத் தடுத்து நிறுத்தவும், முடக்கப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தியை மீட்கவும் சுமார் 10 லட்சம் போர் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

