

கோலாலம்பூர் மார்ச் 28-
மலேசிய இந்தியர் விளையாட்டு பேரவை ஏற்பாட்டில் 2026 ஆம் ஆண்டுக்கான பரதன் கிண்ண கால்பந்து போட்டி இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது.
கூலிம் கெலாடி அரங்கில் மாலை 4 .30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் கெடாவை எதிர்த்து பினாங்கு மோதுகிறது.
பினாங்கு யூஎஸ்எம் அரங்கில் மாலை 4.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பெர்லிஸ் குழுவை எதிர்த்து சிலாங்கூர் மோதுகிறது.
சிரம்பான் ஆர்சி அரங்கில் மாலை 4.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் நெகிரி செம்பிலானை எதிர்த்து மலாக்கா மோதுகிறது.
இதனிடையே கோல் சிலாங்கூர் அரங்கில் மாலை 4.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் கோலாலம்பூர் குழுவை எதிர்த்து போலீஸ் படை குழு மோதுகிறது என்று பரதன் கிண்ண கால்பந்து போட்டி ஏற்பாட்டுக் குழு தலைவர் டத்தோ பதி தெரிவித்தார்.

