உடல் நலிந்து நிலையில் பெருநடை வீரர் ஜி.சரவணன்

பினாங்கு மார்ச் 28-
கடந்த 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் நாட்டிற்காக தங்கப் பதக்கம் பெற்றுத் தந்த முன்னாள் பெருநடை வீரர் ஜி. சரவணனின் நிலை கல்வி, திறன் மேம்பாட்டு அறக்கட்டளையின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சரவணன் ( வயது 56), சில ஆண்டுகளாக மூளை, முதுகுத் தண்டில் உள்ள மோட்டார் நரம்பு செல்களைப் பாதிக்கும் ‘மோட்டார் நியூரான் நோய்’ (MND)-ஆல் அவதிப்படுகிறார்.

அறக்கட்டளையின் தலைவர் டத்தோ நூருல் அரிஃப்பின் அப்துல் மஜீட், சிகிச்சை, மருந்து செலவுகளிலிருந்து குடும்பத்தின் சுமையைக் குறைக்க உதவும் நிதியை திரட்ட முயற்சிக்கிறோம் என்றார்.

“நோய் உறுதிப்பட்டது முதல் சரவணனின் நிலையைக் கவனிக்கிறோம், குடும்பத்தின் சுமையைக் குறைக்க முடிந்தவரை முயற்சிக்கிறோம்.

“முன்பு சரவணனின் நிலை நன்றாக இருந்தது, ஆனால் கடந்த ஆண்டு ஏப்ரலில் சந்தித்த பின்னர் இன்று வரை நிலை மோசமடைந்துள்ளது, இப்போது படுக்கையில் பேச முடியாத நிலையில் உள்ளார்.

“அவரால் குழாய் மூலம் மட்டுமே உணவு உட்கொள்ள முடிகிறது, எப்போதும் சுவாச கருவியைச் சார்ந்திருக்கிறார். இரண்டு நிமிடங்கள் இதயம் நின்று பின்னர் மீட்கப்பட்டுள்ளது” என்றார்.

கடந்த புதன்கிழமை புக்கிட் மெர்தாஜாமில் உள்ள அந்த முன்னாள் வீரர் வீட்டில் அவரது குடும்பத்திற்கு, கடந்த ஆண்டு நிதியம் தொடங்கப்பட்டதிலிருந்து தனிநபர்கள், பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்ட RM1,00,000 நன்கொடையை அறக்கட்டளை வழங்கியதாக அவர் தெளிவுபடுத்தினார்.

“நிச்சயமாக அதிக செலவை உள்ளடக்கும் சிகிச்சை நடவடிக்கைகளுக்கு இது பயன்படுத்தப்படும் என்று நம்புகிறோம்” என்று அவர் கூறினார்.

இதற்கு முன்பு, சரவணனின் நிலை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிமின் கவனத்திற்கும் சென்றது. அவர் உதவி வழங்கியதுடன் முன்னாள் வீரர் குணமடைய பிரார்த்திக்கவும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles