நூருல் இஸா ராஜினாமா செய்ததாகப் பரவும் வதந்திகளை பிகேஆர் கட்சி மறுக்கிறது

Oplus_131072

கோலாலம்பூர்,மார்ச் 28-
பிகேஆர் எனப்படும் கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இஸா அன்வர் ராஜினாமா செய்துவிட்டார் என்ற செய்தியில் உண்மை இல்லை.

பிகேஆர் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் இந்த வதந்திகளை மறுத்தார்.

“போலிச் செய்தி,” என்று அவர் சுருக்கமாகக் கூறினார்.

முன்னாள் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினரின் ராஜினாமா குறித்த யூகங்கள் இன்று அதிகாலையில் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர் பதவியை தொடர்வதாக நூருல் இஸா தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles