மஇகாவுடன் இணைந்து செயல்பட மக்கள் சக்தி கட்சி தயார்! டத்தோஸ்ரீ தனேந்திரன் அறிவிப்பு

மா.பவளச்செல்வம்

போர்ட் டிக்சன் மார்ச் 29-
மஇகா கட்சியுடன் இணைந்து செயல்பட மக்கள் சக்தி கட்சி தயாராக இருக்கிறது என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் தெரிவித்தார்.

ஒன்றாய் வெல்வோம் என்ற தாரக மந்திரத்துடன் மஇகாவுடன் இணைந்து செயல்பட நாங்கள் தயார்.

இந்த நாட்டில் 65 ஆண்டுகளுக்கு மேலாக மஇகா இந்திய சமுதாயத்திற்கு சேவையாற்றி வருகிறது.

மஇகா மீண்டும் மாபெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

கடந்த தேர்தல்களில் நம்மை தோற்கடித்தார்கள். இப்போது அவர்கள் வருத்தப்படுகிறார் கள்.

ஆகவே ஒற்றுமையாக நாம் இருந்தால் எதையும் சாதிக்க முடியும்.

ஆகவே இந்திய சமுதாயத்தின் நலம் கருதி மஇகாவுடன் கரம் கோக்கிறோம்.

மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் அவர்கள் முன் எடுக்கும் திட்டங்களுக்கு முழு ஆதரவு வழங்குவோம்.

அண்மையில் கெடா மாநிலத்தில் மாவீரர் ராஜேந்திர சோழன் சிலையை டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

அடுத்ததாக பினாங்கு பட்டர் வெர்த்தில் ஸ்ரீ கெங்காதரன் சிவப்பெருமான் பிரமாண்டமான முறையில் கட்டி முடிக்கப்படும் என்று அவர் சொன்னார்.

போர்ட்டிக்சன் பாசிர் பாஞ்சாங் லோங் சண்ட் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் சக்தி கட்சியின் ஒன்றாய் வெல்வோம் ஒன்றுகூடல் நிகழ்வில் உரையாற்றிய போது டத்தோஸ்ரீ தனேந்திரன் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles