

மா.பவளச்செல்வன்
போர்ட் டிக்சன், மார்ச் 29-
அடுத்த இலக்கை நோக்கி ஒன்றாய் வெல்வோம் என்ற தலைப்பில் மக்கள் சக்தி கட்சியின் ஒன்று கூடல் விழா போர்ட் டிக்சன் பாசிர் பாஞ்சாங் long sand boutique மண்டபத்தில் மூன்று தினங்களாக மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
நெகிரி செம்பிலான் மாநில மக்கள் சக்தி கட்சியின் தலைவர்
எஸ்.பி. கணபதி சிவலிங்கம் வரவேற்புரையாற்றினார்.
கடந்த ஆண்டு கெடா சுங்கை பட்டாணியில் நடைபெற்ற இந்த நிகழ்வு இந்த ஆண்டு மீண்டும் போர்ட் டிக்சனில் நடைபெற ஆதரவு வழங்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரனுக்கு அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் இந்த விழாவுக்கு சிறப்பு வருகை தந்த ம இகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரனுக்கும் அவர் நன்றியைத் பதிவு செய்து கொண்டார்.
மக்கள் சக்தி கட்சியின் உதவித் தலைவர் சுப்ரமணியம், குபேஸ்வரன், டத்தோ சுகுமாரன், மகளிர் தலைவி ஜெயலெட்சுமி, இளைஞர் அணி தலைவர் திவாகரன், புத்ரி தலைவி சுபத்ரா மற்றும் மஇகா தேசிய தகவல் பிரிவு தலைவர் சிவசுப்பிரமணியம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

