கடந்த தேர்தலில் போட்டியிட்ட போது பல ஏமாற்றங்களை சந்தித்தேன்! டத்தோஸ்ரீ தனேந்திரன் மனம் திறந்தார்

மா.பவளச்செல்வம்

போர்ட் டிக்சன், மார்ச் 29-
நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலில் பினாங்கு நிபோங் திபால் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டேன்.

இங்கு களத்தில் இருந்தபோது பல ஏமாற்றங்களை சந்தித்தேன் என்று மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஆர். எஸ். தனேந்திரன்
மனம் திறந்து பேசினார்.

அதனால் அடுத்த பொதுத் தேர்தலை இன்னும் வீரியத்துடன் சந்திக்க மலேசிய மக்கள் சக்தி கட்சி தயார் நிலையில் உள்ளது என்று டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் கூறினார்.

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் மலேசிய மக்கள் சக்தி கட்சிக்கு நிபோங் திபால் நாடாளுமன்ற தொகுதி வழங்கப்பட்டது. இந்த தொகுதியில் நான் போட்டியிட்டேன்.

இந்தியர்களின் வாக்குகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

மற்றவர்களின் வாக்குகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என வாக்குறுதிகளை வழங்கினார்கள்.

ஆனால் தேர்தல் பணி தொடங்கிய போது தான் பல ஏமாற்றங்களை நான் சந்தித்தேன்.

மலேசிய மக்கள் சக்தி கட்சிக்கு அது முதல் தேர்தல். பல ஏமாற்றஙகளுக்கு மத்தியில் நான் தோல்வி கண்டேன்.

ஏமாற்றங்களில் இருந்து பாடங்களை கற்றுக் கொண்டு மலேசிய மக்கள் சக்தி கட்சி தற்போது வலுவாக உள்ளது என்று இன்று போர்ட் டிக்சனில் மக்கள் சக்தி கட்சியின் சார்பில் நடைபெற்ற ஒன்றாய் வெல்வோம் ஒன்று கூடல் நிகழ்வில் பேசிய போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles