


போர்ட் டிக்சன், மார்ச் 29-
பட்டம் பதவி இல்லை என்றாலும்
நாங்கள் சாக மாட்டோம். சுயமரியாதையே நமக்கு முக்கியம் என்று ம இகா தேசியத் தலைவர்
டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
கடந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தோல்வி கண்டாலும் இன்று ஒற்றுமை அரசாங்கம் அமைவதற்கு மஇகா முக்கிய காரணமாகும்.
இருந்தாலும் அரசாங்க ரீதியில் எந்தவொரு பதவியும் உரிய அங்கீகாரமும் கிடைக்கவில்லை.
பதவி, பட்டம் இல்லை என்றாலும் மஇகா சாகவில்லை.
சுயமரியாதையுடன் சொந்த காலில் மஇகா இப்போது நிற்கிறது. இது தான் முக்கியம்.
அரசியல் கட்சிகள் யாரையும் நம்பி இருக்கக் கூடாது. சொந்தமாக போராட வேண்டும்.
இன்று போர்ட் டிக்சனில் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் ஒன்றுக்கூடல் நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தபோது டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.
மஇகாவும் மலேசிய மக்கள் சக்தி கட்சியும் இணைந்து செயல்படுவதற்கு முடிவு செய்தது. இதற்கு பலர் குறை சொன்னார்கள்.
சொந்த இனத்திற்கு பிரச்சினை என்றால் பல கட்சிகள் இணைந்து செயல்படுகின்றன.
அதன் அடிப்படையில் இந்திய சமுதாயத்தின் நலனுக்காக மஇகாவும் மக்கள் சக்தி கட்சியும் இணைந்து செயல்பட முடிவு செய்தது.
இதில் என்ன தவறு உள்ளது என்று அவர் கேள்வியை எழுப்பினார்.

