மதமாற்றம் உட்பட இந்தியர்களின் பிரச்சனைகளுக்கு மலேசிய இந்து சங்கம் தொடர்ந்து போராட வேண்டும்! டாக்டர் இராமசாமி வேண்டுகோள்

மதமாற்றம் உட்பட இந்தியர்களின் பிரச்சனைகளை தொடர்பில் மலேசிய இந்து சங்கம் தொடர்ந்து போராட வேண்டும் என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் டாக்டர் பி இராமசாமி கேட்டுக் கொண்டார்.

இந்தியர்களின் சமய விவகாரங்களுக்கு ஒரு அரணாக மலேசிய இந்து சங்கம் விளங்க வேண்டும்.

குறிப்பாக மதமாற்றம் உட்பட இந்தியர்களின் சமய விவகாரங்களில் மலேசிய இந்து சங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மலேசிய இந்து சங்கம் மேற்கொள்ளும் திட்டங்களுக்கு முழு ஆதரவு வழங்குவேன்.

புதிய தலைவர் தங்க கணேசன் தலைமையில் இப்போது மலேசிய இந்து சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது.

ஆகவே இந்தியா சமுதாயம் எதிர் நோக்கி இருக்கும் விவகாரங்களில் மலேசிய இந்து சங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.

மலேசிய இந்து சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று பத்துமலை தமிழ்ப் பள்ளி மண்டபத்தில் தேசிய திருமுறை விழாவை அதிகாரப்பூர்வமாக பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவருமான பேராசிரியர் முனைவர் டாக்டர் பி இராமசாமி தொடக்கி வைத்து முழு ஆதரவு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற திருமுறை விழாவை மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் தங்க கணேசன், செயலாளர் மாணிக்கம், பொருளாளர் முனியாண்டி உட்பட அனைத்து பொறுப்பாளர்களும் மிகவும் விமரிசையாக நடத்தி முடித்தனர்.

காலை ஏழு மணிக்கெல்லாம் மாணவர்கள் பாரம்பரிய உடைகளுடன் திருமுறை விழாவில் கலந்து கொண்டனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles