


தனது வாழ்நாள் முழுவதும் ஊழலுக்கும் அநீதிக்கும் எதிராக எழுந்து நின்று போராடியவர் ஜசெக மூத்த அரசியல்வாதி லிம் கிட் சியாங் என்று மனித வள அமைச்சர் வ. சிவகுமார் புகழாரம் சூட்டினார்.
அநீதிக்கு எதிராக
போராடும் வரை சிறைவாசத்துக்கு அஞ்சாத அரசியல்வாதியாக லிம் கிட் சியாங் விளங்கினார்.
பலமுறை சிறைக்குச் சென்றாலும் மனம் தளராமல் இறுதி வரை அனைத்து இனங்களுக்காக போராடியவர் லிம் கிட் சியாங்.
தனிப்பட்ட பெருமைக்காக பட்டங்களை விரும்பாதவர்
எப்போதும் எளிமையான வெள்ளைச் சட்டைகளை அடக்கமாக அணிந்திருப்பதில் திருப்தி அடைந்து நாட்டு மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட ஒரு நேர்மையான அரசியல்வாதி லிம் கிட் சியாங் என்று சிவகுமார் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
ஜசெகவின் மூத்த அரசியல்வாதி சகோதரர் லிம் கிட் சியாங் நேற்று தமது 82 ஆவது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்.
மனித வள அமைச்சர் சிவகுமார் மூத்த அரசியல்வாதி லிம் கிட் சியாங்கிற்கு பொன்னாடை மாலை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
இந்த பிறந்த நாள் விழாவில் ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோனி லோக், உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன், ஜசெக தலைவர் லிம் குவான் எங், உதவித் தலைவர் எம் குலசேகரன், சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் கணபதி ராவ், பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் டாக்டர் பி இராமசாமி, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் நேதாஜி ராயர், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் முனியாண்டி, மலேசிய தமிழர் குரல் அமைப்பாளர் டேவிட் மார்ஷல், டி. கண்ணன், உட்பட பலரும் லிம் கிட் சியாங்கை வாழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

