தைப்பிங் ஜாலான் ஆயர் கூனிங் ஸ்ரீ நவ காளியம்மன் ஆலய திருப்பணிக்கு உதவி கரம் நீட்ட முன் வந்தார் மனித வள அமைச்சர் சிவகுமார்

தைப்பிங் ஜாலான் ஆயர் கூனிங்கில் 55 ஆண்டுகளுக்கு மேலாக அருள் பாலித்து கொண்டு இருக்கும் ஸ்ரீ நவ காளியம்மன் ஆலயம் இப்போது பல லட்சம் வெள்ளியில் கட்டப்பட்டு வருகிறது.

40 விழுக்காடு கட்டுமான பணிகள் மட்டுமே பூர்த்தி அடைந்திருக்கும் வேளையில் இன்னும் 60 விழுக்காடு கட்டுமான பணிகள் பூர்த்தி அடைய ஆலய நிர்வாகத்திற்கு ஒன்றரை லட்சம் வெள்ளி தேவைப்படுவதாக ஆலய திருப்பணி குழுத் தலைவர் ஏ. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்

இவ்வாண்டு இறுதிக்குள் ஆலயத்தைக் கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

ஆலய கட்டுமான பணிகள் பூர்த்தி அடைய மனித வள அமைச்சரும் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினருமான வ. சிவகுமார் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்

இந்நிலையில் மனித வள அமைச்சரின் அரசியல் செயலாளர் ரவீந்திரன், மனித அமைச்சரின் தனிச் செயலாளர் மகேஸ்வரி மற்றும் மனித வள அமைச்சரின் சிறப்பு செயல்பாட்டு பணிகளின் அதிகாரி மகா கணேஷ் ஆகியோர் ஆலயத்தின் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டனர்.

ஆலய கட்டுமான பணிகள் பூர்த்தி அடைய மனிதவள அமைச்சின் மூலம் நிதியுதவி வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles