
தேசிய முன்னணியில் தற்போது 4 உறுப்புக் கட்சிகள் உள்ளன.
இந்நான்கு கட்சிகளும் ஐ.பி.எப், கிம்மா, மக்கள் சக்தி, பார்டி சிந்தா மலேசியா, பஞ்சாபி கட்சி, மலேசிய இந்திய ஐக்கிய கட்சி ஆகிய 6 தேசிய முன்னணி தோழமைக் கட்சிகளுடன் வலுவான உறவைக் கொண்டிருப்பது அவசியம் என்று அம்னோ தலைமைச் செயலாளர் டத்தோ ஸ்ரீ அமாட் மஸ்லான் தெரிவித்தார்.
மேலும் இதர கட்சிகள் தேசிய முன்னணியில் இணைய உறுப்புக் கட்சிகள் திறந்த மானப்பான்மையை கொண்டிருக்க வேண்டும் என்று ஐ.பி.எஃப் கட்சியின் 30 ஆம் ஆண்டு தேசிய பொதுப் பேரவையைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடத்தில் அவர் இதனை தெரிவித்தார்
“நாம் இரண்டு முறை பொதுத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளோம். இந்நிலையில் தேசிய முன்னணியை வலுப் பெறச் செய்ய நம்மிடையே ஒற்றுமை மிக முக்கியம்.கட்சி உட்பூசலைப் புறக்கணித்துவிட்டு மாறுபட்ட கோணத்தில் சிந்திக்கத் தொடங்குவோம்.
இது எனது தனிப்பட்ட கருத்து. எந்தவொரு முடிவும் எடுக்கும் அதிகாரம் தேசிய முன்னணி உச்சமன்றத்திற்கே உள்ளது.
நான் உச்சமன்றத்தில் இடம் பெற்றிருக்கவில்லை.ஆகையால், கருத்துகளைத் தெரிவிக்கும் நிலையில் மட்டுமே நான் இருக்கிறேன் என்றார் அவர்.
ஐபிஎப் கட்சியின் தேசிய தலைவர் டத்தோ லோகநாதன் தமது உரையில் நாட்டில் உள்ள அனைத்து தமிழ்ப் பள்ளிகளும் நவீன வசதிகளுடன் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

