
மலேசிய தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் முன்னாள் உறுப்பினர்கள் பேரவை ஏற்பாட்டில் சிரம்பானில் நடைபெற்ற
தமிழர் திருநாள் விழாவினை நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற துணை சபாநாயகர் டத்தோ ரவி முனுசாமி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துறைக்கான துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி விழாவை நிறைவு செய்து வைத்தார்.
இந்திய சமுதாயத்திற்கு கல்வி மற்றும் பொருளாதர மேம்பாடு மிக அத்தியாவசிய தேவையாக உள்ளது.
அதில் நாட்டின் பிரதமர் இந்தியர்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக தன்னை தொழில் முனைவர் கூட்டுறவு அமைச்சுக்கு நியமித்திருப்பதாக கூட்டுறவு மேம்பாட்டு துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்.
இந்த அமைச்சில் இந்தியர்களுக்கு உள்ள வாய்ப்புகளை தெரிந்து அதற்கு ஏற்ற வகையில் அவர்களுக்கு உதவ உள்ளதாக அவர் கூறினார்.
இந்த விழாவில் தலைமை உரையாற்றிய பேரவை தலைவர் டத்தோ ஆர் ஆர் எம் கிருஷ்ணன், மணி மன்ற பேரவை இந்திய அமைச்சர்கள் மேற்கொள்ளும் அனைத்து திட்டங்களுக்கும் தங்கள் முழு ஆதரவு வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

