


மாரான், ஏப் 1-
மலேசியத் திருநாட்டில் இன்று பங்குனி உத்திர திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
குறிப்பாக மாரான் மரத்தாண்டவர் ஆலய பங்குனி உத்திர திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், டத்தோ டி.மோகன் ஆகியோர் மாரான் மரத்தாண்டவர் ஆலய திருவிழாவில் கலந்து கொண்டபோது ஆலயத் தலைவர் இராமன் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.
ஒற்றுமை துறை துணை அமைச்சர் யூனிஸ்வரன், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன், மலேசிய இந்தியர் மக்கள் கட்சி தலைவர் புனிதன் ஆகியோரும் மாரான் மரத்தாண்டவர் ஆலய பங்குனி உத்திர திருவிழாவில் கலந்து கொண்டனர்.

ஆலய நிர்வாகத்தின் சார்பில் அனைவருக்கும் மாலைகள் அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
கடந்த ஆண்டுகளை போல் இவ்வாண்டு பக்தர்கள் பால்குடம், காவடிகள் ஏந்தி மரத்தாண்டவருக்கு காணிக்கை செலுத்தினர்.
மாரான் மரத்தாண்டவர் ஆலய தலைவர் இராமன் தலைமையில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

