
கோலாலம்பூர் ஏப் 5-
எங்களின் லட்சியம் நிறைவேறும் வரை நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கடுமையாக உழைப்போம் என்று பிபிபி கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.
குறிப்பாக பிபிபி கட்சிக்கு 8 நாடாளுமன்ற தொகுதிகள் கிடைக்கும் வரை நான் கட்சியின் தலைவர் என நான் கூறிக் கொள்ளமாட்டேன்.

கட்சியின் தொண்டனாக இருப்பேன். இந்த நிலை கண்டிப்பாக மாறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இப்போது கட்சி சுமுகமாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும் எங்களின் கொள்கை நிறைவேறும் வரை நாங்கள் அனைவரும் உழைப்போம்.
8 தொகுதிகளை வென்றோம் என்றால் எங்களின் முழு சேவையை மக்களுக்கு மேன்மேலும் அளப்பரிய சேவைகள் வழங்குவோம்.

எங்களின் எதிர்ப்பார்ப்பு ஒரு நாள் நடக்கும் என்று அவர் உறுதியுடன் கூறினார்.
டத்தோ டாக்டர் லோகபாலா அவர்களின் 60ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் கடந்த வெள்ளிக்கிழமை பத்து கேவ்ஸ் செங்கா மண்டபத்தில் விமரிசையாக நடைப்பெற்றது.
இந்த விழாவில் பிபிபி கட்சியின் துணைத் தலைவர் டத்தோ மோகன் கந்தசாமி, உதவித் தலைவர் டத்தோ இளையப்பன், டத்தோ இண்டர்ஜிட் சிங், செயலாளர் டத்தோ சந்திரா, இளைஞர் அணி தலைவர் சத்யா சுதாகரன், மகளிர் அணி தலைவி புனிதா முனிசாமி, சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் உட்பட அனைத்து மாநில தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் போது சிறப்பு அங்கமாக டத்தோ டாக்டர் லோகபாலாவுக்கு பெருமையை சேர்க்கும் வகையில் AI வடிவத்தில் பாடல் ஒளிப்பரப்பட்டது.
சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் இந்த முயற்சியை ஏடுத்திருந்தார்.
இந்த பாடல் காட்சி வந்திருந்தவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
அதன் பின்னர் டத்தோ லோகா பாலவிற்கு சிலாங்கூர் பிபிபியினர் பெரிய அளவிலான மாலையை அணிவித்தனர்.
மலேசியத் தெலுங்கு சங்கத்தின் சார்பிலும் டத்தோ டாக்டர் லோகபாலாவுக்குமாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

