


செ.வே.முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர், ஏப் 4-
கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ ஆதரவில் ஜெட்ஸ் கிளப் ஏற்பாட்டில் விலாயா மாநில ஆரம்பப் பள்ளிகள் இடையிலான அஞ்சல் ஓட்டப்பந்தயப் போட்டி இன்று செராஸ் கால்பந்து அரங்கில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
இந்த போட்டியில் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் உட்பட அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர்.
மொத்தம் 140 குழுக்கள் பங்கேற்ற இந்த போட்டி காலை முதல் மதியம் வரை நடைபெற்றது.
ஜெட்ஸ் கிளப் தலைவர் சி.சிவப்பிரகாசம் தலைமையிலான ஏற்பாட்டாளர்கள் இந்த போட்டியை
திறம்பட நடத்தினர்.
விலாயா மாநில ஓட்டப் பந்தய சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ புலேந்திரன், விலாயா மாநில விளையாட்டு மன்றத்தின் தலைவர் ஸ்டூவர்ட் இராமலிங்கம், மைலோ நிறுவனத்தின் விளையாட்டு பிரிவு நிர்வாகி கெவின் ஆகியோர் முக்கிய பிரமுகர்களாக கலந்து சிறப்பித்தனர்.
100 மீட்டர் அஞ்சல் ஓட்டம், 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் மற்றும் கலப்பு பிரிவு அஞ்சல் ஓட்டமும் இதில் இடம் பெற்றது.
வெற்றி பெற்ற குழுக்களுக்கு மைலோ பரிசுகள் வழங்கப்பட்டன.
விலாயா மாநில அமைச்சர் ஹன்னா இயோ இந்த போட்டி வெற்றி பெறுவதற்கு 20,000 வெள்ளி மானியம் வழங்கினார்.
இந்த தருணத்தில் அமைச்சர் ஹன்னா இயோ அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று சிவப்பிரகாசம் தெரிவித்தார்.
இதனிடையே பல்லின மக்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் பள்ளி மாணவர்கள் கலாச்சார உடைகளை அணிந்து வந்து அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது

