நாட்டின் எண்ணெய் விநியோகம் சீராக உள்ளது – பிரதமர் உத்தரவாதம்

ஷா ஆலாம், ஏப்ரல் 7-
எரிபொருள் விலை சற்று அதிகரிக்க வாய்ப்பிருந்தாலும், எதிர்வரும் சில மாதங்களில் மலேசியா எண்ணெய் விநியோக நெருக்கடியை எதிர்கொள்ளாது என்று எதிர் பார்க்கப்படுகிறது.

பெட்ரோனாஸ் ஒரு நிகர எண்ணெய் இறக்குமதியாளராக இருப்பதாலும், எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுடன் கொண்டுள்ள நல்லுறவாலும் இந்த உத்தரவாதம் வழங்கப் படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

“நமது தயாரிப்புகள் பிரீமியம் தரத்தில் இருப்பதால் அவற்றின் விலை சற்று அதிகமாக உள்ளது, ஆனாலும் நாம் தொடர்ந்து இறக்குமதி செய்கிறோம்.”

“பெட்ரோனாஸின் சிறந்த சாதனைப் பதிவுகள் மற்றும் எண்ணெய் உற்பத்தி நாடுகளுடனான அதன் நல்லுறவுகளுக்குப் பாராட்டு தெரிவிக்கப் பட வேண்டும்.”

“எனவே, விநியோகத்தில் நாம் நெருக்கடியை எதிர்கொள்ளவில்லை. விலையில் சிறிய பாதிப்புகள் இருக்கலாம், ஆனால் அடுத்த சில மாதங்களுக்கு விநியோகம் உறுதி செய்யப் பட்டுள்ளது,” என்று பிஎச் செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டி அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles