
வாஷிங்டன்: ஏப் 9 –
உண்மையான ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ஈரானை சுற்றி அமெரிக்க ராணுவ படைகள் தொடர்ந்து இருக்கும். ஈரான் உடனான ஒப்பந்தங்கள் முழுமையாக அமல்படுத்தப்படும் வரை அமெரிக்கப் படைகள் அங்கேயே முகாமிட்டிருக்கும்.
ஒருவேளை ஒப்பந்தம் மீறப்பட்டால் இதுவரை யாரும் கண்டிராத தாக்குதல்கள் தொடங்கும்.
அணு ஆயுதத் தடை, ஹார்முஸ் நீரிணைத் திறப்பு உள்ளிட்ட நிபந்தனைகளில் எந்த மாற்றமும் இல்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஈரான் அணு ஆயுதங்களைப் பெறக்கூடாது மற்றும் ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது என்று அவர் சொன்னார்.

