
சுங்கைபட்டாணி ஏப் 26-
கடந்த நான்கு ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் இடைநிறுத்தப்பட்டிருந்த ஜாலான் சிந்தா சாயாங் பகுதியில் அமைந்துள்ள யூ.பி. ஸ்ரீ ருத்ர வீரமுத்து மகா மாரியம்மன் ஆலயத்தின் திருப்பணி, அடுத்த மாதம் எந்தத் தடையும் இல்லாமல் மீண்டும் தொடங்கும்.
இத்தகவலை ஆலயத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள பெ. சின்னத்தம்பி என்ற கோவிந்தசாமி அவர்கள் தெரிவித்தார். ஆலய வளர்ச்சி மற்றும் பக்தர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் இந்த திருப்பணியை தொடர்ந்து முன்னெடுக்க தமது நிர்வாகம் உறுதி எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆலயத் திருப்பணியினை விரைவில் முடித்து அதற்கான கும்பாபிஷகேகத்தை சிறப்பான முறையில் நிகழ்த்த விருப்பதாகவும்,இந்த யூபி தோட்டத்தில் பிறந்த மண்ணின் மைந்தர்கள் மற்றும் நன்கொடை நெஞ்சங்கள் முன் வந்து நன்கொடையினை வழங்குமாறு ஆலய நிர்வாகம் அன்புடன் கேட்டுக் கொண்டது.
சுங்கைபட்டாணி வட்டாரத்தில் மிகவும் பிரசித்த பெற்ற யூபி ஶ்ரீ வீரமுத்து மகா மாரியம்மன் ஆலயம் நான்கு ஆண்டுகளாக தடைப்பட்ட திருப்பணியினால் இந்த யூபி அம்மனின் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற முடியாமல் மனக்குமறலை வெளிப்படையாக பரவலாக தெரிவித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற ஆலய பொதுத்தேர்தலில் பெ.சின்னத்தம்பி தலைவராகவும்,லெ.வே.பழனிச்சாமி துணைத்தலைவராகவும்,சண்முகம் குப்பன் செயலாளராகவும் அதன் துணைச் செயலாளராக பிரசாந் தர்மலிங்கம்,பெ.முருகேசன் பொருளாளராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.

