உலகக் கிண்ண கால்பந்து போட்டி!Rtm -unifi tv அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு!

கோலாலம்பூர் மே 7-
2026 உலகக் கிண்ண கால்பந்து போட்டியை மலேசிய மக்கள் ஆர்.டி.எம் மற்றும் Unifi TV கண்டு மகிழலாம் என்று தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாமி பட்சில் தெரிவித்தார்.

இந்த இரண்டு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளன.

உயர் தர ஒளிபரப்பையும், நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்குப் பரந்த அணுகலையும் உறுதி செய்வதற்காக, தனியார் துறையுடனான ஒத்துழைப்பின் மூலமே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று பாமி பட்சில் தெரிவித்துள்ளார்.

MyTV மூலமான இலவச ஒளிபரப்பு, RTM க்ளிக், Unifi TV மூலமான OTT தளங்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்கள் மூலம் அந்தப் போட்டி ஒளிபரப்பப்படும்.

“Unifi TV-ல் மொத்தம் 104 போட்டிகளின் விரிவான ஒளிபரப்பு நேரலையில் ஒளிபரப்பப்படும். அதே சமயம், ஆர்.டி.எம், நேரலையில் அல்லது பதிவு செய்யப்பட்ட ஒளிபரப்பின் மூலம், பெரும்பாலான போட்டிகளை ஒளிபரப்பும்.

“இது, ரசிகர்களுக்குப் பல்வேறு காணொளித் தேர்வுகளை வழங்குகிறது” என்று அங்காசாபுரியில் நடைபெற்ற வாராந்திர ஊடகச் சந்திப்பில் அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles