
சென்னை மே 7-
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 73 இடங்களில் வெற்றி பெற்றது.
இதில் 5 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் இப்போது திமுக கூட்டணியில் இருந்து விலகி விஜய் கட்சியுடன் கூட்டணி அமைத்து உள்ளது.
இந்நிலையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் விசிக தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்டு கட்சிகளின் தலைவர்கள் சண்முகம் மற்றும் வீரபாண்டியன் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.
ஆட்சி அமைக்க விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை விஜய் கோரியுள்ள நிலையில் ஸ்டாலினை சந்தித்துள்ளனர்.
அப்போது திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டாம் என்றும் தற்போது அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் எனவும் மு.க.ஸ்டாலின் கூறியதாக கூறப்படுகிறது.

