


கோலாலம்பூர் ஜூன் 5-
நாட்டில் மிகவும் துடிப்புடன் இயங்கி வரும் Blues Brother Welfare Association Malaysia இயக்கம் கம்போங் பண்டான் தமிழ்ப் பள்ளி விளையாட்டு போட்டிக்கு 5,000 வெள்ளி வழங்கி பேருதவி புரிந்துள்ளது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கம்போங் பண்டான் தமிழ்ப் பள்ளி விளையாட்டுப் போட்டி மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
கம்போங் பண்டான் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றியோடு பதக்கங்களை தட்டிச் சென்றனர்.
சிறப்பு வருகை தந்த Ybhg Tuan Abdul Samad
(President Malaysia, Blues Brothers Welfare And Association Malaysia), Vikneswaran Pillai
(Advisor Singapore, Blues Brothers Welfare And Association Singapore) மற்றும் Ybhg Datuk Dr.M.Shankar
(Youth President Malaysia, Blues Brothers Welfare And Association Malaysia) ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கினர் சிறப்பு செய்தனர்.
மேலும் கம்போங் பண்டான் தமிழ்ப் பள்ளி விளையாட்டு போட்டி வெற்றி பெற 5,000 வெள்ளி வழங்கினோம் என்று டத்தோ டாக்டர் எம் சங்கர் தெரிவித்தார்.

