KLSICCI தேர்தலில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் முதல் இந்திய பெண்மணி மோகனா சின்னத்தம்பி!

கோலாலம்பூர் ஜூன் 6-.
நாட்டில் 98 ஆண்டுகள் வரலாறு கொண்ட கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தேர்தல் கலை கட்டிருக்கிறது.

இதில் நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

குறிப்பாக கோலாலம்பூர்- சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தேர்தலில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் முதல் இந்திய பெண்மணியாக மோகனா சின்னத்தம்பி வரலாறு படைத்திருக்கிறார்.
கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் உதவித் தலைவராக இருந்த பன்னீர் செல்வத்தை எதிர்த்து இவர் துணை தலைவர் பதவிக்கு போட்டியிடுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மோகனா சின்னத்தம்பி தற்போது கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தில் நடப்பு செயலாளர் ஆவார்.

இருப்பினும் மிக துணிச்சலுடன் தனது சேவையை முன் வைத்து துணை தலைவர் பதவிக்கு போட்டியிட முன் வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் பன்னீர்செல்வம் மிகவும் செல்வாக்கு மிக்கவர். அரசியல் மற்றும் வார்த்த துறையில் பெயர் பதித்தவர்.

இவரை எதிர்த்து மோகனா சின்னத்தம்பி களம் இறங்கி இருப்பது தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கத்தின் (KLSICCI) துணைத் தலைவர் பதவிக்கு முதல் பெண் வேட்பாளராகப் போட்டியிடுவதில் நான் பெருமை கொள்கிறேன் என்று மோகனா சின்னத்தம்பி குறிப்பிட்டுள்ளார்.

சங்கத்தில் உச்ச மற்ற உறுப்பினராகவும், உதவி கௌரவப் பொதுச் செயலாளராகவும், தற்போது கௌரவப் பொதுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ள இவர் சங்கத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளார்.
முதல் பெண் துணைத் தலைவர் வேட்பாளர் KLSICCI-ஐ அதன் அடுத்த நூற்றாண்டுக்கு வழிநடத்த முற்படுகிறார்.
பாரம்பரியத்திலிருந்து தலைமைத்துவம் வரை: KLSICCI உறுப்பினர்களுக்கான புதிய நூற்றாண்டு வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளார்.

RM5 மில்லியன் வணிக வாய்ப்புகள், 500 சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், 100 பெண் தொழில்முனைவோர்: KLSICCI-யின் வெற்றி பெற்ற அணி, தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சேவையாற்றியுள்ளார்

நிகழ்வுகள் மட்டுமல்ல, முடிவுகளும் முக்கியம்: வலுவான, வணிகத்தை மையமாகக் கொண்ட KLSICC வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல முடியும் என்று இவர் வாக்குறுதி அளிக்கிறார்

ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வேட்பாளர் மற்றும் ஒரு மாற்றத்தை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வை. KLSICCI-க்கு ஒரு வலிமையான எதிர்காலம் உள்ளது என்பதை கவனத்தில் கொள்க வேண்டும் என்று தனது உறுப்பினர்களை அன்போடு கேட்டுக் கொண்டுள்ளார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles