
நீலாய், ஜூலை 21-
நாட்டில் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்த கட்சியுடன் இன்று கூட்டணி அமைத்து இருக்கிறார்கள்.
இது சந்தர்ப்பவாத அரசியல் என்று நீலாய் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் அருள் குமார் தெரிவித்தார்.
தமிழ்ப் பள்ளிகள் நமது அடையாளம். நூறு ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்ப் பள்ளிகள் இயங்கி வருகிறது.
தாய்மொழி பள்ளிகளுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்த கட்சியுடன் இந்திய அரசியல் கட்சிகள் இன்று கூட்டணி வைத்துள்ளது.
இந்த சந்தர்ப்பவாத அரசியல் கட்சிகளை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இனவெறி கட்சிகளுக்கு எதிராக இந்திய சமுதாயம் விழிப்புடன் இருக்க வேண்டும்.
ஓட்டுக்காக இந்திய சமுதாயத்தை நாடி வருவார்கள். பின்னர் நமக்கு எதிராக குரல் கொடுப்பார்கள் என்று அவர் சாடினார்.

