நெகிரி செம்பிலான் மாநில இந்தியர்கள் பக்கத்தான் ஹராப்பானுக்கு வாக்களியுங்கள்! டாக்டர் குணராஜ் வேண்டுகோள்

சிரம்பான் ஜூலை 21-
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் இந்திய வாக்காளர்கள் பக்கத்தான் ஹராப்பானுக்கு வாக்களிக்கும்படி செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் கேட்டுக் கொண்டார்.

நேற்று
சுவா சட்டமன்றத் தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட அவர், இங்குள்ள இந்தியர்களின் பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு சிறப்பு திட்ட வரைவு உருவாக்கப்படும் என்றார்.

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் சுவா சட்டமன்றத் தொகுதியில் டத்தோ யூ பூன் போட்டியிடுகிறார்.

அவருக்கு ஆதரவு கோரும் வகையில் சுவா சுற்றுவட்டாரத்தில் உள்ள இந்திய மக்களுடன் நேற்று சந்திப்பு நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சுற்றுவட்டார மக்கள் கலந்து கொண்டு பல்வேறு பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

குறிப்பாக இவ்வட்டார மக்கள் பல்வேறு அடிப்படை பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார்.

இப்பிரச்சினைகள் அனைத்திற்கும் முறையாக தீர்வு காண நம்பிக்கை கூட்டணி அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும்.

இதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படும். அதற்கு நெகிரி செம்பிலானில் நம்பிக்கை கூட்டணி அரசு நீடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

ஆகவே இத்தொகுதி இந்தியர்கள் முழுமையாக நம்பிக்கை கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும். இதுவே எனது வேண்டுகோள் ஆகும் என்று குணராஜ் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles