ஆரோக்கிய மடானி திட்டத்திற்கு விரைந்து விண்ணப்பம் செய்யுங்கள்!

கோலாலம்பூர் ஜூன் 7-
இந்திய சமூகத்தின் நலனை மேம்படுத்தும் நோக்கில், மித்ரா அமைப்பு தங்களின் இரண்டு முக்கிய திட்டங்களுக்கான விண்ணப்பங்களைத் தொடங்கியுள்ளது என்று மனிதவள அமைச்சர் மற்றும் மித்ரா தலைவர் டத்தோஸ்ரீ இரமணன் தெரிவித்தார்.

ஆரோக்கியா மடானி 2026 டயாலிசிஸ் உதவித் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள சிறுநீரக நோயாளிகளுக்கு ஐந்தாயிரம் ரிங்கிட் வரை மானியம் வழங்கப்பட உள்ளது.

மேலும் பி40 மற்றும் எம்40 வருமானக் குழுவைச் சேர்ந்த இந்தியர்களை இலக்காகக் கொண்ட இந்தத் திட்டத்தில், பி40 குழுவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மொத்தம் 1,300 பேர் பயனடையும் இந்தத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 4 ஆம் தேதி அன்று மூடப்படும்.

இதற்கிணையாக, 2026-ஆம் ஆண்டிற்கான கல்வி மடானி – கல்வி உதவித் திட்டத்திற்கான விண்ணப்பங்களும் தற்போது திறக்கப்பட்டுள்ளன.

எஸ்.பி.எம். மற்றும் எஸ்.டி.பி.எம். தேர்வுகளுக்குத் தயாராகும் 5,000 இந்திய பி40 மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கல்வி மடானி திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஜூன் 19, 2026 அன்று மூடப்படும்.

மேற்கண்ட இரண்டு திட்டங்களுக்கும் விண்ணப்பிக்க விரும்பும் தகுடியுடையவர்கள், மித்ராவின் www.mitra.gov.my எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவங்களையும் வழிகாட்டுதல்களையும் அணுகலாம்.

மேலும், இந்தத் திட்டங்கள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு மித்ராவின் முகநூல் (MITRA Kesuma)) பக்கத்தைப் பார்வையிடவும்.

ஆரோக்கியா மடானி திட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு 03-8886 6239 அல்லது 6221 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது sks@mitra.gov.my என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். கல்வி மடானி திட்டம் தொடர்பான மேலதிகத் தகவல்களுக்கு 03-8886 6192 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும் அல்லது spl@mitra.gov.my என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles