மனித வள அமைச்சர் சிவகுமாருக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டாம்!
அவர் தனது கடமையை சிறப்பாக செய்ய வாய்ப்பு வழங்குவோம்!
கிள்ளான் எம்பி கணபதி ராவ் வேண்டுகோள்

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மனித வள அமைச்சர் வ சிவகுமார் தனது பணியை திறம்பட செய்ய போதுமான வாய்ப்பை வழங்குவோம்.

அவருக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டாம் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் கேட்டுக் கொண்டுள்ளார்.

அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய அமைச்சர் அவர் மட்டுமே.

மேலும்
மனித வள அமைச்சராக சிவகுமார் பதவியை ஏற்று இப்போதுதான் மூன்று மாதங்கள் ஆகிறது.

ஒரு அமைச்சர் என்ற வகையில் அவர் தனது கடமையை சிறப்பாக செய்து வருகிறார்.

இந்திய சமுதாயம் எதிர் நோக்கி இருக்கும் பிரச்சனைகளை தீர்வு காண அவருடன் இணைந்து நானும் ஒத்துழைப்பேன் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான அவர் சொன்னார்..

தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மற்றும் கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ நீ சிங் நடத்தி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும் போது கணபதி ராவ் இவ்வாறு தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles