
சிறையில் இறந்த வேறொரு ஆடவரின் சடலம் இந்திய குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்தியர் பிரிவு சிறப்பு அதிகாரி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
உண்மையில் சிறையில் இறந்தவர் யார். உயிருடன் இருக்கும் ஒருவர் இறந்து விட்டதாக கூறி அவரின் குடும்பத்திற்கு வேறோரு வரின் சடலம் அனுப்பி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் தவறு இழைத்த சிறைச்சாலை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று அவர் கேள்வியை எழுப்பினார்.

