ஸ்கூடாய் தொகுதிமக்களின் மேம்பாட்டுக்காக அரயாது உழைப்பேன்!கார்த்தியாயினி ஜெயபாலன் அறிவிப்பு

ஸ்கூடாய் ஜூலை 9-
ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பான் சார்பில் ஸ்கூடாய் தொகுதியில் போட்டியிடும் கார்த்தியாயினி ஜெயபாலன் இறுதி கட்ட பிரச்சாரத்தில் இறங்கி உள்ளார்.

இவருக்கு ஆதரவாக மூத்த அரசியல்வாதி லிம் கிட் சியாங், ஹன்னா இயோ, கணபதி ராவ், பாப்பா ராயுடு,: செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் உட்பட பலரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்கூடாய் தொகுதியில் கார்த்தியாயினி ஜெயபாலன் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று கூறப்படுகிறது.

ஸ்கூடாய் தொகுதி மக்களின் மேம்பாட்டுக்காக அரயாது உழைப்பேன் என்று அவர் கூறி உள்ளார்.

மேலும் வாகன நிறுத்துமிட (Parking) பிரச்சினைக்கு சமநிலையான தீர்வு

  • உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவு சவால்களை சமாளித்தல்
  • வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகளை முன்னெடுத்தல்
  • பொதுமக்களுக்கும் முதியோருக்கும் உகந்த, மேலும் அணுக எளிதான பொதுவசதிகளை மேம்படுத்துதல்
  • ஸ்கூடாய் முதியோரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் போன்றவை தமது முக்கிய அம்சங்கள் ஆகும் என்று அவர் கூறுகிறார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles