நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பக்கத்தான் ஹராப்பான் தயாராகி விட்டது!

சிரம்பான் ஜூலை 16-
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணியின் வியூகத்தை பக்கத்தான் ஹராப்பான் கணித்து விட்டது

BN கூட்டணி PN கூட்டணியுடன் அரசியல் ஒத்துழைப்பு நடத்தும் சாத்தியம் குறித்து நம்பிக்கை கூட்டணி அனுமானித்துள்ளதாக DAP கட்சியின் தலைமை செயலாளர் அந்தோனி லோக் கூறினார்.

நெகிரி செம்பிலான் மாநில தேர்தலைப் பொறுத்தவரை, நம்பிக்கை கூட்டணி அதன் தேர்தல் கேந்திரங்களை சரிசெய்ய முழு தீவிரம் காட்டி வருகிறது.

போட்டியிடும் தொகுதிகளில் வெற்றி பெறுவதற்காக, கூட்டணிக் கட்சிகளிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதே நம்பிக்கை கூட்டணியின் தற்போதைய முன்னுரிமையாகும் என்று சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மொத்தமுள்ள 36 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளதால் நம்பிக்கை கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles