ஆக 2இல் பத்து மலையில் 32 ஆம் ஆண்டு ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் மாபெரும் கல்வி யாத்திரை!

கோலாலம்பூர் ஜூலை 16-
இந்திய சமுதாயத்தின் மத்தியில் கல்வி புரட்சியை ஏற்படுத்தி 40,000 க்கும் மேற்பட்ட மாணவர்களை பட்டதாரிகளாக உருவாக்கி சாதனை படைத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்திற்கு உண்டு.

தொடர்ந்து 44 ஆண்டுகளாக ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

கல்வி தந்தை டான்ஸ்ரீ டாக்டர் எம்.தம்பிராஜா அவர்கள் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தை தோற்று வித்து இந்திய சமுதாயத்தை கல்வியில் உயர்த்தினார்.

அவரின் ஆசியோடு ஒவ்வொரு ஆண்டும் நாடு தழுவிய அளவில் கல்வி யாத்திரை மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் 32 ஆம் ஆண்டு கல்வி யாத்திரை வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி தமிழ் கடவுள் முருகப் பெருமான் குடிக்கொண்டிருக்கும் பத்துமலை திருத்தலத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது என்று ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் சுரேன் கந்தா தெரிவித்தார்.

உலகில் கல்விக்காக யாத்திரை எடுக்கும் ஒரு நாடு மலேசிய மற்றும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையமாகும்.

ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெறும் கல்வி யாத்திரையில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் முருகன் வேல் வழங்கப்படும்.

முன்னதாக ஜூலை 26 ஆம் தேதி முருகப் பெருமான் குடிக் கொண்டிருக்கும் ஆறு தலங்களில் ஆறுவேல் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

அதன் பின்னர் ஆகஸ்ட் 2 ஆம் தேதி காலை 8.01 மணிக்கு மேல் பத்துமலை திருமுருகன் திருத்தலத்தில் ஆறு வேலுடன் கல்வி யாத்திரை அதிகாரப்பூர்வமாக தொடங்கும் என்று அவர் சொன்னார்.

272 படிக்கட்டுகளை ஏறிய பின்னர் மாணவர்கள் முருகப் பெருமானின் வேலுக்கு அபிஷேகம் செய்வார்கள்.

முன்னதாக
காலை 7.00 மணிக்கு மேல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும்.

ஆகவே குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து மாணவர்களும் பெற்றோர்களும்பத்துமலை திருத்தலம் வந்து விட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles