

சிரம்பான் ஜூலை 18-
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி இடையே கடுமையான போட்டி நிலவினாலும் நீலாய் சட்டமன்ற தொகுதியில் அருள் குமார் அலை வீசுகிறது.
இம்முறை நீலாய் சட்டமன்றத் தொகுதியில் ஐந்து முனை போட்டி நிலவுகிறது.
இந்த தொகுதியில் மட்டும் 5 பேர் போட்டியிடுகின்றனர்.
தேசிய முன்னணி சார்பில் லாய் சியான் கோங் போட்டியிருகிறார்.
பக்கத்தான் ஹராப்பான் சார்பில் ஆட்சிக் குழு உறுப்பினர் அருள்குமார் மீண்டும் அத்தொகுதியில் போட்டியிடுகிறார்.
பெர்சத்து கட்சியின் சார்பில் டத்தோ வீ. சரவணக்குமார் மற்றும் பெர்ஜாசா கட்சியின் சார்பில் ஷமானி இப்ராஹிமும் சுயேட்சையாக ஒமார் முகமட் இசாவும் போட்டியிடுகின்றனர்.
கடந்த தேர்தலில் நம்பிக்கை கூட்டணியின் அருள்குமார் 10,899 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீலாய் சட்டமன்ற தொகுதியில் ஐந்து முனை போட்டி நிலவினாலும் தொகுதி மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றி இருப்பதால் அருளாகுமார் வெற்றி உறுதி என்று கணிக்கப்படுகிறது.

