பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கோபிந்த் சிங் டியோ களம் இறங்கினார்

சிரம்பான் ஜூலை 18-
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்று சமூகமாக முடிவடைந்தது.

இதில் தேசிய முன்னணி மற்றும் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி இடையே மிகவும் கடினமாக போட்டி உருவாகியுள்ளது.

பாஸ் கட்சி, ஹம்ஸா ஜைனுடின் தலைமையிலான வவாசான் கட்சி, கெராக்கான் மற்றும் மலேசிய இந்தியர் மக்கள் கட்சியும் இம்முறை பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.

இம்முறை தேசிய முன்னணி மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் நெகிரி செம்பிலான் மாநிலத்தை தற்காத்துக் கொள்ள பக்கத்தான் ஹராப்பான் களம் இறங்கி உள்ளது.

இன்று நடைபெற்ற வேட்புமனு தாக்கலின் போது பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஜசெக தலைவர் கோபிந்த் சிங் டியோ, லிம் குவான் எங், செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன், பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ, பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சிவநேசன் உட்பட பல முக்கிய அரசியல்வாதிகள் களம் இறங்கி இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles