

ஆகஸ்டு முதல் தேதியில் நடைபெறும் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 16ஆவது சட்டமன்ற தேர்தலில் இந்தியர்கள் சிந்தித்து தங்களின் வாக்குகளை செலுத்த வேண்டும் என சிலாங்கூர் மாநில கெஅடிலான் தேர்தல் அமைப்பின் தலைவர் டாக்டர் சத்யபிரகாஷ் அறிவுறுத்தினார்.
இன்று ஜூலை 18ஆம் தேதி நெகிரி செம்பிலான் மாநில தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.
இதில் சிகாமாட், சுவா, அம்பாங்கான் ஆகிய மூன்று தொகுதிக்கான பாக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை ஆதரித்து தனது குழுவுடன் டாக்டர் சத்யபிரகாஷ் களமிறங்கினார்.
இந்த மூன்று தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களுக்கான ஆதரவு சிறப்பாக உள்ளது.
இந்த தேர்தலை பொறுத்த வரையில் பச்சை நிற கொடி கொண்ட கட்சியுடன் இணைந்து செயல்பட முற்படும் கட்சிகளை ஆதரிக்க வேண்டுமா வேண்டாமா என்பதை மக்கள் தான் சிந்திக்க வேண்டும்.
அண்மையில் நடைபெற்ற ஜோகூர் மாநில தேர்தலின் முடிவுகளை நெகிரி செம்பிலானுடன் ஒப்பிட முடியாது. இரு மாநிலங்களிலும் வெவ்வேறு சூழல் நிலவுகின்றன.
எனவே, இந்திய சமூகம் இந்த தேர்தலை முக்கியமான வாய்ப்பாக கருதி, தங்கள் சமூகத்தின் எதிர்காலம், கலாச்சாரம் மற்றும் நம்பிக்கைகளைப் பாதுகாக்கும் வகையில் ஆழமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றும் டாக்டர் சத்யபிரகாஷ் வலியுறுத்தினார்.

