

சிரம்பான் ஜூலை 18-
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்று சமூகமாக முடிவடைந்தது.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஆட்சி புரியும் பக்கத்தான் ஹராப்பான் மீண்டும் ஆட்சியை தற்காத்துக் கொள்ள விரும்புகிறது.
இந்த தேர்தலில் தேசிய முன்னணி மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இருப்பினும் மக்கள் ஆதரவோடு வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க முடியும் என்று பக்கத்தான் ஹராப்பான் நம்புகிறது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற வேட்புமனு தாக்கலின் போது பக்கத்தான் ஹராப்பானுக்கு ஆதரவாக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பெரும் அளவில் களம் இறங்கியது பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மீண்டும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

