



லிங்கி, ஜூலை 18:
நெகிரி செம்பிலான், தம்பின் லிங்கி தோட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா கருமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பூஜையில் பிரதமரின் நாடாளுமன்ற தொகுதி சிறப்பு அதிகாரியான டத்தோ சுரேஷ் குமார் ராமசந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வின் போது, லிங்கி தொகுதியின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருனின் வாழ்த்துச் செய்தியையும் அவர் மக்களிடம் கொண்டு சேர்த்தார். அதோடு, ஆலய நிர்வாக குழுவினருக்கு மானியமும் வழங்கப்பட்டது.
மேலும், அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடிய டத்தோ சுரேஷ் குமார், அவர்களின் கருத்துகள் மற்றும் தேவைகளையும் கேட்டறிந்தார்.
இதன் மூலம் உள்ளூர் இந்திய சமூகத்துடன் நல்லுறவை மேலும் வலுப்படுத்தியதுடன், லிங்கி சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பிரசாரத்தின் முக்கிய அம்சமாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

