
பத்துமலை, ஜூலை 19-
மலேசியாவில் மிகவும் பிரசித்திபெற்ற சக்தி வாய்ந்த கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் (பிள்ளையார்) கோவில் மகா கும்பாபிஷேகம் நாடு எதிர்பார்த்தபடி எதிர்வரும் 23.08.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு மேல் 10.40 மணிக்குள் மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது என்று ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர்.நடராஜா தெரிவித்தார்.
இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எதிர்வரும் 16.08.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிமுதல் விநாயகர் பூசையுடன் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து பூசைகள் நடைபெறும்.
அந்தப் பூசையில் 2000 விநாயகர் திருவுரு ஆரிக்காலிக் (Acrylic) கார் ஸ்டிக்கர்கள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு பிறகு பொதுமக்களுக்கு நன்கொடை 20.00 வெள்ளம் விற்பனை செய்யப்படவுள்ளது.
அதே போல கும்பாபிஷேக மலரும், கும்பாபிஷேக மகிமையும், 32 பிள்ளையாரின் அவதாரப் படங்கள் மற்றும் விளக்கங்கள், கட்டுரைகள், ஆன்மீக மலரும் விற்பனைக்கு வரவுள்ளன.
19.08.2026 புதன்கிழமை முதல் யாகசாலைப் பிரவேசம் நடைபெற உள்ளது.
வரும் 19.8.2026 புதன்கிழமை காலை 10 மணி முதல் 20.8.2026 வியாழக்கிழமை இரவு வரை பக்தர்கள் தங்கம் வெள்ளி நவரத்தினங்களை வைக்கலாம்.
பக்தர்கள் எக்காரணம்கொண்டும் கண்ணாடிக் கற்களை வைப்பதற்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
ஆகவே பக்தர்கள் காணிக்கை செலுத்துபவர்கள் தங்கங்களை மட்டுமே செலுத்த வேண்டும். இப்பொழுது உள்ள தங்கங்கள் அனைத்தும் எடுக்கப்பட்டு பாமாக ஆக்ஷ்டிக்கப்பட்டு மீண்டும் கீழேயே வைக்கப்பட்டு உள்ளது.
இந்தக் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 21.8.2026 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 22.8.2026 சனிக்கிழமை இரவு வரை பக்தர்கள் கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசருக்கு எண்ணெய் சாத்துதல் நடைபெறும்.
கும்பாபிஷேகம் நிறைவுபெற பின்னர் பட்டுச் சாத்துவதற்கு விரும்புகின்ற பக்தர்கள் ஆலயத்தில் முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.
23.08.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரவு 7.00 மணிக்குமேல் கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் பெருமான் தங்கரத வீதி உலாவும் நடைபெற உள்ளது.
தங்க இரத உலா கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலை வந்தடையும்.
அன்றைய தினம் ஆவணிமூலம் உபயப் பூசைகள் நிறைவடைந்த பின்னர் மீண்டும் தங்கரதம் கோர்ட்டுமலைஸ்ரீ கணேசர் ஆலயத்தை வந்தடைந்து கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா இனிதே நிறைவுபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மலேசிய ரிங்கிட் 4 மில்லியன் செலவில், இந்தக் கோவில் பூரண, முழுமையான கருங்கல் கோயிலாக மாற்றியமைக்கப்பட்டு, கட்டப்பட்டு அழகு படுத்தப்பட்டு, கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது.
கோவிலில் அமைந்துள்ள விநாயகர் சிலைச் சிற்பங்கள் அனைத்தும் மகாபீடத்தில் செய்யப்பட்டு செம்பு வரப்பூட்டு அளவு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலேயுள்ள விமானம், பரம்பரிய கலை வேலைப்பாடுகள் கருங்கல் கோபுரமும் இந்த விமானம் மாற்றப்பட்டு கட்டப்பட்டு கலை நயத்துடன் உயர்த்தி என்பன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் கோவில் திருப்பணிக்கு தங்களால் இயன்ற பெரும் நன்கொடையை வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
இந்த நிர்வாக உறுப்பினர்களுக்கும் தேவஸ்தானத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இக்கும்பாபிஷேக நிகழ்வுகளை உலகம் முழுவதும் நேரலையில் ஒளிபரப்புகின்ற ஊடகங்களுக்கும் தமிழ் பத்திரிகைகளுக்கும் தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் ஸ்ரீ கணேசர் கோயிலின் தலைமை அர்ச்சகர் சிவஸ்ரீ சிவகுமார் அவர்களுக்கும், அனைத்து அர்ச்சகர்களுக்கும், நாதஸ்வரம், தவில் கலைஞர்களுக்கும், வேத விற்பன்னர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இக்கும்பாபிஷேகப் பெருவிழாவில் அனைத்து இந்து சமய மக்களும் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு ஸ்ரீ கோர்ட்டுமலை விநாயகப் பெருமானின் அருளாசியைப் பெற்று வாழ்வில் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று சிறப்புடன் வாழுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நடைபெறும் யாகசாலை பூஜைகள், சிறப்பு அபிஷேகங்கள், மகா தீபாராதனைகள், தங்கரத உலா, அன்னதானம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கும்பாபிஷேக தினத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்கள் ஆலய நிர்வாகத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ஒழுங்காக தரிசனம் செய்யுமாறும், வாகனங்களை குறிப்பிட்ட இடங்களில் மட்டும் நிறுத்துமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அரசுத் துறைகள், பாதுகாப்பு அமைப்புகள், ஊடகங்கள், தன்னார்வத் தொண்டர்கள், நன்கொடையாளர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று
டான்ஸ்ரீ டாக்டர் ஆர். நடராஜா இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

