
தோக்கியோ, ஜூலை 19-
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் டோக்கியாவில் நடைபெற்றது.
.இதில் இந்தியா, சீனா, ஜப்பான், இந்தோனேசியா உள்பட பல்வேறு . நாடுகளைச் சேர்ந்த விளையாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
ஜப்பான் ஓபன் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் பி.வி.சிந்து.
இந்நிலையில், இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் அகானே யமாகுச்சியுடன் மோதினார்.
சிறப்பாக விளையாடிய சிந்து 21-17, 21-17 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

