

கோலாலம்பூர் ஜூலை 19-
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து புரட்சி இயக்கம் பாடுபடும் என்று புரட்சி தலைவர் டத்தோ மூர்த்தி மற்றும் உமாகாந்தன் தெரிவித்தனர்.
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி வைத்துள்ளது.
தேசிய முன்னணி சார்பில் ம இகா கட்சி சிரம்பான் ஜெயா மற்றும் ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது.
அதேசமயம் லுக்குட் சட்டமன்றத் தொகுதியில் மலேசிய இந்தியர் மக்கள் கட்சி போட்டியிடுகிறது.
பார்ட்டி வவாசான் நெகரா கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்ஸா ஜைனுடினுக்கு புரட்சி முழு ஆதரவை வழங்குகிறது.
பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியில் பார்ட்டி வவாசான் நெகரா முக்கிய அங்கம் வகிக்கிறது.
அந்த அடிப்படையில் தேசிய முன்னணி மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர்களை ஆதரித்து நாங்கள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி இருக்கிறோம்.
இந்த இரு கூட்டணியில் இடம் பெற்றுள்ள
ம இகா மற்றும் மலேசிய இந்தியர் மக்கள் கட்சி வேட்பாளர்களுக்கு முழு ஆதரவு அளிக்கிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.
இன்று தோட்ட மாளிகையில் புரட்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் களம் நிகழ்வு மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்ஸா ஜைனுடின் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

