நெகிரி செம்பிலான் மாநிலத்தில் தேசிய முன்னணி தீவிர பிரச்சாரம்!

சிரம்பான் ஜூலை 19-
நெகிரி செம்பிலான் மாநில தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலில் நீல அலை வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

துணைப் பிரதமரும், அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, ஆயிரக்கணக்கான தேசிய முன்னணி ஆதரவாளர்களுடன் சேர்ந்து கூட்டணி வேட்பாளர்களுக்கு வலுவான ஆதரவை வழங்குவதற்காக ரெம்பாவ் நாடாளுமன்ற சேவை மைய வளாகத்திற்கு வந்தார்.

குறிப்பாக மக்கள் சக்தி கட்சியின் 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் நானும், அனைத்து தேசிய முன்னணி வேட்பாளர்களுக்கும் முழு ஆதரவைத் தெரிவிக்க வந்திருந்தோம்.

நெகிரி செம்பிலான் மக்கள், இந்த மாநிலத்திற்கு வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் கொண்டு வந்த அனுபவம் வாய்ந்த, நிலையான, நிரூபிக்கப்பட்ட தலைமையையே தொடர்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மக்கள் சக்தி கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ தனேந்திரன் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles