தாமான் கோப்பராசி கியூபெக்ஸ் குடியிருப்பாளர் சங்கத்தின் இலவச மருத்துவ முகாம் வெற்றிகரமாக நடைபெற்றது!

காஜாங், ஜூலை 19-
காஜாங் தாமான் கோப்பராசி பொதுமக்கள் மத்தியில் சுகாதார நலனில் முன்னுரிமை வழங்கும் நோக்கத்துடன் இலவச சுகாதார பரிசோதனை முகாம் மற்றும் ரத்ததான முகாம் மேற்கொள்ளப்பட்டன.

காஜாங், தாமான் கோப்பராசி கியூபெக்ஸ் குடியிருப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஏழாவது முறையாக இலவச சுகாதார இந்நிகழ்ச்சி மிகவும் நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்டது என்று தாமான் கோப்பராசி கியூபெக்ஸ் குடியிருப்புச் சங்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் சங்கிலி முத்து இரத்தினம் கூறினார்.

இன்று ஜூலை மாதம் 19 ஆம் தேதி தாமான் கோப்பராசி கியூபெக்ஸ் சமூகநல மண்டபத்தில் 2026 ஆம் ஆண்டின் மனித நேய ரத்ததானம் முகாம் மற்றும் இலவச சுகாதார பரிசோதனையில்
நீரிழிவு, ரத்தம் பரிசோதனை போன்ற சுகாதாரப் பரிசோதனைகள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை புரிந்த பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷா ரெட்ஷான் ஜோஹான், செனட்டர் தியாகராஜன் ராஜகோபால், பாங்கி கெஅடிலான் தொகுதித் தலைவர் புவான் லிம் கிம் எங், தாமான் கோப்பராசி கியூபெக்ஸ் குடியிருப்பாளர் சங்கப் பொறுப்பாளர்கள், பொது மக்கள் உட்பட
சுமார் 250 பேர் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற காரணமாக இருந்த அனைத்து தரப்பினருக்கும் செயலவை உறுப்பினர்களுக்கும்
பொது மக்களுக்கும் டத்தோ சங்கிலிமுத்து நன்றி தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் கண் பார்வை, பல் மற்றும் இதர சிகிச்சைகளை பொதுமக்கள் பெற்று பயன் அடைந்துள்ளனyர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாமான் கோப்பராசி வட்டார மக்கள் சுகாதார நலன் கருதி இந்த இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்தோம் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles