

இந்நாட்டில் கர்ப்பிணி தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய முதலாளிமார்களுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று மனிதவள அமைச்சர் வ சிவக்குமார் அதிரடியாக அறிவித்துள்ளார்.
தொழிலாளர்கள் சந்தையில் பெண்களின் ஈடுபாடு குறித்து பாரிட் சூலோங் நாடாளுமன்ற உறுப்பினர் Noraini Ahmad நேற்று மக்களவையில் கேள்வியை முன் வைத்தார்.
இந்த கேள்விக்கு பதில் வழங்கிய மனிதவள அமைச்சர் வ. சிவகுமார்,
கடந்த ஜனவரி முதலாம் தேதி அமலுக்கு வந்த 265 சட்டத் திருத்தத்தில் பெண் தொழிலாளர்களின் நலனில் கூடுதல் அக்கறை செலுத்தப்படுகிறது என்றார்.
குறிப்பாக பெண் தொழிலாளர்கள் கர்ப்பக் காலத்தில் அவர்களை பணி நீக்கம் செய்யப்படுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
அப்படி பணி நீக்கம் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட முதலாளிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.
தற்போது மகப்பேறு விடுமுறையை 60இல் இருந்து 98 நாட்களாக உயர்த்துவது உட்பட பல புதிய சலுகைகள் பெண் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது என்று அவர் சொன்னார்.

