ரந்தாவ் ஆயர் கூனிங் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு
மனித வள அமைச்சர் வ சிவகுமார் 15,000 வெள்ளி மானியம்

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ரந்தாவ் ஆயர் கூனிங்கில் அருள் பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மனித வள அமைச்சர் வ சிவகுமார் 15,000 வெள்ளி மானியம் வழங்கி பேருதவி புரிந்துள்ளார்.

நேற்றிரவு கோவிலுக்கு சிறப்பு வருகை புரிந்த மனித வள அமைச்சர் சிவகுமாருக்கு கோவில் தலைவர் சுப்ராயன் சிறப்பு செய்தார்.

ரந்தாவ் ஆயர் கூனிங்கில் வசிக்கும் இந்தியர்களின் தாய்க் கோவிலாக மீனாட்சி அம்மன் கோவில் விளங்குகிறது.

இப்போது பல லட்சம் வெள்ளியில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்த கோவிலுக்கு நன்கொடை வழங்கும்படி மனித வள அமைச்சர் சிவகுமாரை கேட்டுக் கொண்டேன்.

அவர் மிக விரைவில் இந்த கோவிலுக்கு நேரடியாக வருகை புரிந்து 15,000 வெள்ளியை வழங்கியது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று கோவில் தலைவர் சுப்ராயன் தெரிவித்தார்.

மீனாட்சி அம்மன் கோவில் கட்டி முடிக்கப்பட்டதும் இங்குள்ள மக்களுக்கு சமய அறப்பணிகளை மேற்கொள்ளும் ஒரு தலமாக விளங்க வேண்டும் என்று மனிதவள அமைச்சர் சிவக்குமார் கேட்டுக் கொண்டார்.

மனித வள அமைச்சரின் அரசியல் செயலாளர் ரவீந்திரன், தனிச் செயலாளர் மகேஸ்வரி, சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், சொக்சோ நிறுவனத்தின் இயக்குநர் டி.கண்ணன் உட்பட நூறுக்கும் மேற்பட்டவர்கள் இந்த சந்திப்பில் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles