

மலேசிய திருநாட்டில் தமிழ்ப்பள்ளிகளும் ஆலயங்களும் இந்திய சமுதாயத்தின் இரு கண்களாக விளங்கிக் கொண்டிருக்கிறது என்று மனிதவள அமைச்சர் வ.சிவக்குமார் தெரிவித்தார்.
ஆலயங்களுக்கு ஏன் மானியம் கொடுக்கிறீர்கள்? தமிழ்ப்பள்ளிக்கு கொடுத்தால் போதும் என்று என்னிடம் பலர் கூறி வருகின்றனர்.
அதே சமயம் ஆலயங்களுக்கு மானியம் கொடுத்தால் போதும் என்று ஒரு சிலரும் கூறுகின்றனர்.
என்னை பொறுத்தவரையில் தமிழ்ப்பள்ளிகளும் ஆலயங்களும் நமது இரு கண்கள்
.இரண்டுமே நமக்கு தேவை.
இந்த நாட்டில் இந்திய சமுதாயம் நிலைத்து வாழ்ந்து வருவதற்கு தமிழ்ப்பள்ளிகளும் ஆலயங்களும்தான் காரணம்.
அதனால், இந்த இரு கண்களை நாம் கண்டிப்பாக பாதுகாக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.
நம் சமுதாயத்தில் குறிப்பிட்ட மாணவர்கள் வேறு மொழிப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். இந்தியர் மத்தியில் இந்த சிந்தனை மாற வேண்டும்.
நம் நமது பிள்ளைகளை தமிழ்ப் பள்ளிகளுக்கு அனுப்பி வைப்போம்.
தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைத்துலக ரீதியில் சாதித்து வருகின்றனர்.
ஆகவே, இந்தியப் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு யோசிக்காமல் மனமுவந்து அனுப்ப வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
நெகிரி செம்பிலான் ரந்தாவ் ஆயர் கூனிங் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சிறப்பு வருகை புரிந்த மனித வள அமைச்சர் சிவகுமார், கோவில் திருப்பணிக்கு அமைச்சின் சார்பில் 15,000 வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

