ஜெலாபாங் தம்பாஹான் பத்து ஸ்ரீ மதுரை வீரன் ஆலய திருவிழாவில் மனித வள அமைச்சர் சிவகுமார் கலந்து சிறப்பித்தார்

பேராக் மாநிலத்தில் ஈப்போ ஜெலாபாங் தம்பாஹான் பத்துவில் அருள் பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ மதுரை வீரன் ஆலய வருடாந்திர திருவிழா நேற்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

மனித வள அமைச்சரும் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினருமான வ சிவகுமார், ஜெலாபாங் சட்டமன்ற உறுப்பினர் சியா பாவ் ஹியான் மற்றும் மனித வள அமைச்சரின் தனிச் செயலாளர் மகேஸ்வரி உட்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆலய திருவிழாவில் கலந்து சிறப்பித்தனர்.

ஆலய நிர்வாகத்தின் சார்பில் மனித வள அமைச்சர் சிவகுமாருக்கு சிறப்பு செய்யப்பட்டது.

இந்த ஆலயத் திருவிழாவில் கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள இந்து ஆலயங்கள் சமய வழிபாட்டிற்கு முன்னணியை வழங்கி அதே சமயம் சமூகத்திற்கும் அரணாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles