



செர்டாங் ஆக 22-
சிலாங்கூர் சுக்மா கபடி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இன்று சிலம்பம் போட்டி அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
மொத்தம் 14 தங்கம்,14 வெள்ளி, 20 வெண்கலப் பதக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இம்முறை சபா, சரவாக், பெர்லிஸ், திரெங்கானு, கிளாந்தான் ஆகிய மாநிலங்கள் கலந்து கொண்டது பெருமை அளிக்கிறது என்று மலேசிய சிலம்ப கழகத்தின் தலைவர் டாக்டர் சுரேஸ் தெரிவித்தார்.
சிலாங்கூர் சுக்மாவில் சிலம்பம் இடம் பெறுமா என்ற கேள்வி எழுந்தது.
மலேசிய சிலம்ப கழகம் மற்றும் சமுதாய தலைவர்கள் கொடுத்த அழுத்தத்தின் பேரில் சிலம்பம் சேர்த்து கொள்ளப்பட்டது.
இதன் பலனாக சிலாங்கூர் சுக்மா போட்டியில் சிலம்பம் இடம் பெற்றுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார் அவர்.

