

செர்டாங், ஆக 22-
சிலாங்கூர் சுக்மா போட்டியில் இன்று சிலம்பம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
மொத்தம் 14 தங்கம், 14 வெள்ளி, 20 வெண்கலத்தை வெல்ல 14 மாநில குழுக்கள் களம் இறங்கி உள்ளது.
இந்நிலையில் இன்று காலையில் ஆண்களுக்கான தனி திறமை போட்டியில் விலாயா மாநிலத்தைச் சேர்ந்த நிவேஷ் சொக்கலிங்கம்
தங்கம் வென்று சாதனை படைத்தார்
இவர் தனது முழு திறமையை வெளிப்படுத்தி தங்கம் வென்ற போது விலாயா மாநில சிலம்பம் விளையாட்டாளர் கள் பெரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
இம்முறை விலாயா மாநில சிலம்பக் குழுவுக்கு நிர்வாகியாக கமலநாதன் பொறுப்பு ஏற்றுள்ளார்.
இதனிடையே விலாயா மாநில சிலம்பக் கழகத்தின் தலைவர் டாக்டர் ஆர் டி. உதயகுமார் அவர்கள் சுக்மா போட்டியில் முதல் தங்கத்தை வென்ற நிவேஷ் சொக்கலிங்கம் தை வெகுவாக பாராட்டினர்

