பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஏற்பாட்டில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவுக் கருத்தரங்கில் 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பூச்சோங், ஆக.26-
அன்றாட வாழ்க்கை மற்றும் பணிச்சூழலில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது தொடர்பான செயற்கை நுண்ணறிவுக் கருத்தரங்கில் 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பின் தலைமையில்
பூச்சோங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் தொழில்துறையினர், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் குறித்து அறிந்து கொண்டனர்.

அன்றாடப் பணிகளில் ChatGPT, DeepSeek உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை எவ்வாறு திறமையாகவும் பயனுள்ள வகையிலும் பயன்படுத்துவது என்பது தொடர்பான நடைமுறை விளக்கங்கள் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டன.

மேலும், People, Process and Technology (PPT) என்ற கட்டமைப்பின் மூலம் மனிதவளம், செயல்முறை மற்றும் தொழில்நுட்பம் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து தனிநபர் செயல்திறனையும் தொழில்சார் பணிகளின் திறனையும் மேம்படுத்துவது குறித்தும் கருத்தரங்கில் விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு பூச்சோங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத் தலைவர் டத்தோ ஏ.பி. சிவம் மண்டப வசதியை வழங்கி ஆதரவு தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் தொழில்துறையினர் மத்தியில் AI குறித்த புரிதலை ஏற்படுத்தி, அதனை நடைமுறை வாழ்க்கையிலும் தொழில்சார் பணிகளிலும் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கான அறிவை வழங்குவதே இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கமாக அமைந்தது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles